முத்துப்பேட்டை தர்ஹா
725ம் ஆண்டு மாபெரும் ஹந்தூரி விழா
சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு 724 ஆண்டுகளாய் அனைவரையும் அரவணைத்து வரும் முத்துப்பேட்டை தர்ஹாவில், 725ம் ஆண்டு ஹந்தூரி விழா கண்ணியத்தோடும் பரம்பரியத்தோடும் இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
அனைவருக்கும் அன்புடன் அழைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இந்திய பெரு விழாக்களில் ஒன்றான முத்துப்பேட்டை தர்ஹா 725ம் ஆண்டு மாபெரும் பெரிய ஹந்தூரி விழா இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 12.10.2026 புனித தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது.
இவ்விழா சாதி, மதம், இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு சமத்துவத்தோடும், சங்கையோடும், கண்ணியமாக, இந்த மண்ணின் பாரம்பரியம் மாறாமல் நடத்தப்பட்டு வருகிறது. 724 ஆண்டுகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் வருகை தரக்கூடிய பொது ஸ்தலமாக முத்துப்பேட்டை தர்ஹா, இன்றளவும் கட்டுக்கோப்போடும் கம்பீரமாகவும் தோற்றமளித்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல், 725ம் ஆண்டு மாபெரும் ஹந்தூரி விழாவும் மிகச் சிறப்போடும், சங்கையோடும், கண்ணியத்தோடும், பரம்பரியத்தோடும், வேற்றுமைகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டு இந்த ஆண்டும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற இருக்கிறது.
முக்கிய நிகழ்வுகள்
ஜமாத்துல் அவ்வல் பிறை 1 முதல் 14 வரை நடைபெறும் மூன்று புனிதத் தருணங்கள்.
கொடி ஏற்றம்
தர்ஹாவிலிருந்து புனித கொடி ஊர்வலமாக முத்துப்பேட்டை பிரதான வீதி வழியாக (பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம்) சென்று மீண்டும் தர்ஹா நுழைவாயிலை வந்தடைந்து, கொடி ஏற்றப்படும்.
சந்தன கூடு / சந்தனம் பூசுதல்
மஹான் ஹக்கீமுல் ஹூக்கமா செய்குல் அஃலம் அஷ்ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் அவர்களின் மசார் ஷரீஃபில் புனித சந்தனம் கண்ணியமாக பூசப்படும்.
கொடி இறக்கம் & தபுரூக் அன்னதானம்
மெளலூது ஓதுதல், துஆ, குர்ஆன் தமாம் ஆகியவற்றுக்குப் பின் புனித கொடி இறக்கப்படும். அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தபுரூக் எனும் அன்னதானம் வழக்கம்போல் வழங்கப்படும்.
தினசரி மெளலூது சரீப்
ஜமாத்துல் அவ்வல் பிறை 1 முதல் 14 வரை (12.10.2026 – 25.10.2026)
மஹான் ஹக்கீம் செய்குத் தாவூது காமில் வலியுல்லாஹ் தர்ஹாவில் தினமும் மெளலூது சரீப் ஓதப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
12.10.2026 (திங்கள்) முதல் 25.10.2026 (ஞாயிறு) வரை — ஜமாத்துல் அவ்வல் பிறை 1 முதல் 14 வரை.
இவ்விழாவில் அனைவரும் கலந்துகொண்டு எஜமானுடைய துஆ பரகத்தைப் பெற அன்புடன் அழைக்கிறோம். சாதி, மதம், இனம் என்ற வேறுபாடின்றி இந்த மண்ணின் அனைத்துத் தரப்பு மக்களும் வருகை தந்து ஆசி பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலதிக விவரங்களுக்கு
முத்துப்பேட்டை தர்ஹா தொடர்பு எண் — அழையுங்கள் அல்லது வாட்ஸ்அப் செய்யுங்கள்.